Kareena Kapoor

Advertisment

‘பாகுபலி’ படங்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸிற்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்களும் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்ததாக எந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அப்படம் தன்னுடைய 25வது படம் என்பதால் படத்திற்கான கதையை தேர்வு செய்வதில் பிரபாஸும் மிகுந்த கவனம் செலுத்திவந்தார்.

இந்த நிலையில், பிரபாஸின் அடுத்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஜாப்னீஸ், சைனீஸ், கொரியன் என எட்டு மொழிகளில் உருவாகவுள்ளது.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6ca978fb-b8d0-42aa-a7e9-ff5a2bf0d778" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_52.jpg" />

Advertisment

இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ‘ஸ்பிரிட்’ படத்தின் கதாநாயகி குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.